குஜராத்தில் உள்ள லோத்தல் நகரத்தில் ஒரு தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகமானது படகு கட்டுமானம், கடல்சார் வரலாற்றை மீட்டு எடுத்தல் மற்றும் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் தொல்பொருள் ஆய்விற்கான ஒரு சுயாதீன ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட இருக்கின்றது.
இது இந்தியப் பெருங்கடலில் உள்ள கப்பல்கள் விபத்துக்குள்ளான இடங்களிலிருந்து மீட்கப் பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்த இருக்கின்றது.
லோத்தல் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பழைமையான நகரமாகும்.
இது 1954 ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினால் (Archaeological Survey of India – ASI) கண்டுபிடிக்கப் பட்டது.