TNPSC Thervupettagam

தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் 2026

September 6 , 2026 7 days 73 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) 2022-23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் 2026-ஐ வெளியிட்டது.
  • இந்த வெளியீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), மொத்த மதிப்புக் கூட்டல் (GVA), தேசிய வருமானம், நுகர்வு, சேமிப்பு, மூலதன உருவாக்கம், பொதுத்துறை மற்றும் வெளிப்புற பரிவர்த்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 64 அறிக்கைகளைக் கொண்டுள்ளது.
  • இது காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளுடன், 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இறுதி மதிப்பீடுகள், 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் 2025-26 ஆம் ஆண்டிற்கான தற்காலிக மதிப்பீடுகளை உள்ளடக்கியுள்ளது.
  • புதிய உற்பத்தியாளர் விலை குறியீடு (PPI), தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIP) மற்றும் வங்கி சேவைகள் விலை குறியீடு (BkSPI) ஆகியவற்றைப் பயன்படுத்தி மதிப்பீடுகள் திருத்தப்பட்டன என்பதோடு இவை அனைத்தும் புதுப்பிக்கப்பட்ட நிர்வாகத் தரவுகளுடன் 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டுள்ளன.
  • புதுப்பிக்கப்பட்ட குறிகாட்டிகள் 2022-23 ஆம் ஆண்டு முதல் GDP மற்றும் GVA மதிப்பீடுகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளன, இதில் சுரங்கம், உற்பத்தி, வர்த்தக சேவைகள் மற்றும் பொது நிர்வாகம் போன்ற துறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
  • புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளின் கீழ், 2025-26 ஆம் ஆண்டிற்கான உண்மையான GDP வளர்ச்சி 7.7% இலிருந்து 7.8% ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் நடப்பு விலையிலான GDP வளர்ச்சி 8.9% இலிருந்து 8.6% ஆகத் திருத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்