மத்திய அமைச்சரவை தேசிய கனிமக் கொள்கை – 2019 என்ற கொள்கைக்கு ஒப்புதலளித்திருக்கின்றது.
இது தற்போது நடைமுறையிலிருக்கும் தேசிய கனிமக் கொள்கை – 2008 என்பதை மாற்றுகின்றது.
புதிய தேசிய கனிமக் கொள்கை மிகுந்த செயல்விளைவுடைய ஒழுங்குமுறையை உறுதி செய்யும்.
இது எதிர்காலத்தில் நீடித்த சுரங்கத் துறை வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு இத்திட்டங்களால் பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு ஏற்படக்கூடிய விவகாரங்களுக்குத் தீர்வுகளை அளித்திடும்.
இது கனிமத் துறைக்காக நீண்ட காலத்திற்கு வேண்டிய ஏற்றுமதி – இறக்குமதி கொள்கையை முன்மொழிகின்றது.
இது எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஆதரவளிப்பதற்காக தலைமுறைகளுக்கு இடையேயான பங்கு என்ற கருத்துருவை அறிமுகப்படுத்துகின்றது.
மேலும் இது சுரங்கத் துறையில் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக ஒரு முறையை நிறுவனப்படுத்துவதற்கான அமைச்சரவை அமைப்பை ஏற்படுத்தவும் எண்ணுகின்றது.