சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் கல்வி அமைப்பிற்கு அவர் அளித்தப் பங்களிப்புகளைக் கௌரவிப்பதையும், தேசிய மேம்பாட்டிற்குக் கற்றலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "AI and Education – Preserving Human Agency in a World of Automation" என்பதாகும்.
மௌலானா அபுல் கலாம் ஆசாத், பல்கலைக்கழக மானியக் குழு (UGC), கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சபை (AICTE) போன்ற முக்கிய நிறுவனங்களை நிறுவுவதில் பங்களித்தார்.