TNPSC Thervupettagam

தேசிய கல்வி தினம் 2026 - நவம்பர் 11

November 14 , 2026 8 hrs 0 min 27 0
  • இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11 அன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று பிறந்தார், மேலும் அவர் 1947 முதல் 1958 ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
  • மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (தற்போது கல்வி அமைச்சகம்) 2008 ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது, மேலும் முதல் தேசிய கல்வி தினமானது 2008 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று கொண்டாடப்பட்டது.
  • உயர்கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) போன்ற நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்தார்.
  • சாகித்ய அகாதமி, சங்கீத நாடக அகாதமி மற்றும் லலித் கலா அகாதமி போன்ற கலாச்சார நிறுவனங்களுக்கும் அவர் ஆதரவளித்தார்.
  • கல்வி மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 1992 ஆம் ஆண்டில் அவருக்கு மரணத்திற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்