இந்திய அரசாங்கமானது தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு “தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்” என்று மறுபெயரிட்டுள்ளது.
இந்தப் பெயர் மாற்றமானது “2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை இந்தியாவிலிருந்து அகற்றுதல்” என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
இது ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்கை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே இந்த இலக்கை அடையும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
மேலும், துல்லியமாக நோயைக் கண்டறிய உதவும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய தொழில்நுட்பமான ட்ரூநாட் எம்டிபி (TrueNat MTB) எனப்படும் கண்டுபிடிப்பிற்கு உலக சுகாதார அமைப்பானது சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு மணி நேரத்தில் காசநோயைக் கண்டறியக் கூடிய ஒரு புதிய மூலக்கூறு சோதனையை ட்ரூநாட் கருவியானது சோதிக்கின்றது.
இந்தச் சோதனையானது பாக்டீரியாவைக் கண்டறிவதற்காக பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினைகளைப் பயன்படுத்துகின்றது.