தேசிய குடற்புழு நீக்கத்திற்கான தினத்தின் 8-வது சுற்றுப் பரப்புரை
February 12 , 2019 2370 days 807 0
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் தனது தேசிய குடற்புழு நீக்கத்திற்கான தினத்தின் 8-வது சுற்றை நடத்தியது.
இத்தினம் குழந்தைகளின் மத்தியில் குடலில் ஒட்டுண்ணி புழுக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கு எண்ணுகின்றது.
இது ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10-ஆம் தேதியும் ஆகஸ்டு 10-ஆம் தேதியும் நடத்தப்படுகின்றது.
இத்தினத்தின் நிகழ்ச்சியன்று 1 முதல் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் இருக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பாலர் பள்ளி செல்லும் குழந்தைகள் ஆகியோருக்கு அல்பென்டாசோல் மாத்திரைகள் வாய் வழியாக கொடுக்கப்படும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 64 சதவிகித இந்திய மக்கள் இத்தகைய தொற்றுநோய்கள் தாக்கும் அபாயத்தில் இருக்கின்றனர்.
இந்த சுற்றின் போது ஏறக்குறைய 24 கோடி குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் சிகிச்சையளிக்கப்படுவர்.