TNPSC Thervupettagam
December 14 , 2025 4 days 22 0
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஷில்ப் குரு மற்றும் தேசிய கைவினை விருதுகளைகே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
  • டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு தேசிய கைவினை வார கொண்டாட்டத்தின் போது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
  • 12 ஷில்ப் குரு விருதுகள் மற்றும் 36 தேசிய கைவினை விருதுகள் உட்பட மொத்தம் 48 விருதுகள் வழங்கப்பட்டன.
  • உலோக வேலைப்பாடு, மர வேலைப்பாடு, ஜவுளி, ஓவியம், சுடுமண் பாண்டம், தோல் பொம்மலாட்டம், கம்பளங்கள் மற்றும் கரும்பு மற்றும் மூங்கில் வேலைப்பாடுகள் போன்ற பல்வேறு கைவினைப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
  • விருது பெற்றவர்களில் 20 பெண் கைவினைஞர்களும் அடங்குவர்.
  • ஷில்ப் குரு விருது பெற்றவர்களில் அஜித் குமார் தாஸ், சுதிர் குமார் மகாராணா, D. சிவம்மா, கமலேஷ் சர்மா, சுபாஷ் அரோரா மற்றும் ஷாஹீன் அஞ்சும் ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்