கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருது வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மாட்டினங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் (RGM) கீழ் இந்த விருதுகள் நிறுவப்பட்டுள்ளன.
சிறந்த பால் பண்ணையாளர், சிறந்த பால் கூட்டுறவு சங்கம்/பால் உற்பத்தியாளர் நிறுவனம்/பால் பண்ணையாளர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.
1-வது இடம் – முரளீதரன் நாயர் (கேரளா); 2-வது இடம் – ஒடேத்ரா ராஜ்ஷிபாய் (குஜராத்); 3-வது இடம் – மதன் மோகன் யாதவ் (ஹரியானா) ஆகியோர் சிறந்த பால் பண்ணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
1-வது இடம் – டி.என்.டி 93 தச்சூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (தமிழ்நாடு); 2-வது இடம் – டிங்கா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கர்நாடகா); 3-வது இடம் – எருத்தேன்பதி ஷீரோல்பாதக சககரண சங்கம் (கேரளா) ஆகியன சிறந்த பால் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
1-வது இடம் – சுபங்கர் நந்தி (மேற்கு வங்காளம்); 2-வது இடம் – ராஜேஷ் குமார் மஹ்தோ (ஜார்க்கண்ட்); 3-வது இடம் – ஷேக் ஷஃபி (ஆந்திரப் பிரதேசம்) ஆகியோர் சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநராகத் (AIT) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பால் பண்ணையாளர் – சாகர் சிங் ராவத் (உத்தரகாண்ட்); பால் கூட்டுறவு சங்கம் – சக் தேவியா பால் கூட்டுறவு லிமிடெட் (ஜம்மு மற்றும் காஷ்மீர்); செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் – சுதேஷ் குமார் (உத்தரகாண்ட்) ஆகிய மாநிலங்களுக்கு வடகிழக்கு/இமயமலை மாநிலங்களுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
முதல் இரண்டு பிரிவுகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே ₹5 இலட்சம், ₹3 இலட்சம் மற்றும் ₹2 இலட்சம் ரொக்கப் பரிசுகளைக் கொண்டுள்ளன.