தேசிய சட்ட சேவை தினம் - நவம்பர் 09
November 13 , 2022
915 days
309
- இந்தத் தினமானது, 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் தொடக்கத்தை நினைவு கூருகிறது.
- 1987 ஆம் ஆண்டின் சட்ட சேவைகள் அதிகாரச் சபை சட்டமானது 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதியன்று இயற்றப்பட்டது.
- இது 1995 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
- இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது 1995 ஆம் ஆண்டில் தேசிய சட்ட சேவைகள் தினத்தை நிறுவியது.
- சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
- மேலும், இது மனுதாரர்களின் உரிமைகளை அவர்களுக்கு நினைவூட்டுவதற்கான ஒரு தினமாகும்.
- தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) ஆனது 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
- இந்தியத் தலைமை நீதிபதி இந்த அமைப்பின் புரவலத் தலைவர் ஆவார்.

Post Views:
309