TNPSC Thervupettagam

தேசிய சட்டமன்றக் குறியீடு

January 25 , 2026 2 days 34 0
  • தேசிய சட்டமன்றக் குறியீடு (NLI) ஆனது 86வது அகில இந்திய சபாநாயகர் மாநாட்டில் மக்களவை சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
  • நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களின் பணிகளை அளவிடுவதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குமான ஒரு செயல்திறன் மதிப்பீட்டு முறை இதுவாகும்.
  • கூட்டத்தொடரின் எண்ணிக்கை, சட்டமன்ற வெளியீடு, குழுப் பணிகள் மற்றும் அவை நேரத்தைப் பயன்படுத்துதல் போன்ற புறநிலைக் குறிகாட்டிகளை இந்த NLI குறியீடு பயன்படுத்துகிறது.
  • சட்டமன்றங்களில் விவாதங்களின் செயல்திறன், பொறுப்புக்கூறல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இது ஆரோக்கியமான போட்டி மற்றும் சிறந்த சட்டமியற்றுதலை ஊக்குவிக்க மாநிலங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு இடையே ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்