தேசிய சமூக உதவித் திட்டத்தை (NSAP) 2026-27 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ₹53,428 கோடி ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சமூக உதவிகளை வழங்குவதற்காக 1995 ஆம் ஆண்டில் NSAP திட்டம் தொடங்கப்பட்டது.
NSAP திட்டம் 'பிரதான் மந்திரி சமாஜிக் சகாயதா யோஜனா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான முதியவர்களுக்கு ஓய்வூதிய உதவி வழங்கும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS), 'பிரதான் மந்திரி விருத்தவஸ்தா பென்ஷன் யோஜனா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான விதவைகளுக்கு ஓய்வூதிய உதவி வழங்கும் இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம் (IGNWPS), 'பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய உதவி வழங்கும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (IGNDPS), 'பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் பென்ஷன் யோஜனா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய குடும்ப உதவித் திட்டம் (NFBS), 'பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
0–79 வயதுடைய பயனாளிகளுக்கான மாதாந்திர மாற்றுத்திறனாளி ஓய்வூதிய உதவித்தொகை ₹300 லிருந்து ₹375 ஆகவும், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ₹500 லிருந்து ₹625 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை தகுதி வரம்பு 80% லிருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பிறப்பிலிருந்தே மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களையும் உள்ளடக்கும் வகையில் தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதிய உதவித்தொகையில் எந்த மாற்றமும் இல்லை.