மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியத்தை அமைக்க உள்ளதாக அறிவித்தது.
சாலைப் பாதுகாப்பு, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் புதியத் தொழில்நுட்ப ஏற்பு போன்றவற்றின் மேம்பாட்டிற்குத் தேசிய சாலைப் பாதுகாப்பு வாரியம் பொறுப்பு வகிக்கும்.
சாலைப் போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன இயக்கத்தினை இது ஒழுங்குமுறைப் படுத்தும்.
இந்த வாரியத்தின் தலைமையகமானது தேசிய தலைநகர் பகுதியில் நிறுவப்படும்.
இந்த வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் மத்திய அரசினால் நியமிக்கப் படுவர்.