2022 ஆம் ஆண்டிற்கான புதிய சுகாதார நலத்திட்டமானது, ஆயூஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் தேசிய சுகாதார ஆணையத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் சுகாதார நலத் திட்டத்தின் புதிய அறிவிப்பில் 365 புதிய நடைமுறைகள் சேர்க்கப்பட்டதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழான மொத்த மருத்துவ வசதிகளின் எண்ணிக்கை 1949 ஆக உயர்ந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், நகரத்தின் வகை மற்றும் மருத்துவ நலன் ஆகியவற்றின் அடிப்படையில் வகையீட்டு விலையானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டமானது தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடைபெற்ற 2 நாட்கள் அளவிலான சந்திப்பில் தொடங்கப்பட்டது.