அரசாங்கத்தின் சுகாதாரச் செலவினம் அதிகரித்துள்ளதையும், குடும்பங்களின் சுகாதாரச் செலவினம் குறைந்துள்ளதையும் காட்டும் 2023–24 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதாரக் கணக்குகள் (NHA) மதிப்பீடுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் சுகாதாரச் செலவினம் ₹1.30 லட்சம் கோடியிலிருந்து (2013–14) ₹4.14 லட்சம் கோடியாக (2023–24) மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மொத்த சுகாதாரச் செலவினத்தில் மக்களின் நேரடிச் செலவினம் (OOPE) 64.2%-லிருந்து 42.7%-ஆகக் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் தனிநபர் அரசாங்க சுகாதாரச் செலவினம் ₹1,042-லிருந்து ₹2,959-ஆக அதிகரித்துள்ளது.
2023–24 ஆம் ஆண்டில் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புக்கான அரசாங்கச் செலவினம் ₹1.53 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
மொத்த சுகாதாரச் செலவினத்தில் சுகாதாரத்திற்கான சமூகப் பாதுகாப்புச் செலவினம் 6%-லிருந்து 11%-ஆக அதிகரித்துள்ளது.
இந்த மதிப்பீடுகள் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் (NHSRC) கீழ் உள்ள தேசிய சுகாதாரக் கணக்குகள் தொழில்நுட்பச் செயலகத்தால் (NHATS) தயாரிக்கப்பட்டுள்ளன.