இந்தியா உலகின் இரண்டாவது தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகத்தை (NESL) புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் (CSIR) தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் திறந்து வைத்துள்ளது.
NESL ஆனது இந்தியப் பருவநிலை சூழல்களின் கீழ் காற்று மாசுபாடு கண்காணிப்பு கருவிகளைச் சோதித்தல், அளவுத் திருத்தம் செய்தல் மற்றும் சான்றளிப்பதற்கான ஓர் உச்ச நிலை தேசிய மையம் ஆகும்.
இந்த ஆய்வகம் ஆனது இந்தியாவிற்கென குறிப்பிட்ட தரநிலைகளை உருவாக்குவதையும், தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP) போன்ற மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் காணப்படும் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் தூசி மாசுபாடு நிலைகளுக்கான கருவிகளை அளவுத் திருத்தம் செய்வதன் மூலம் NESL துல்லியமான மற்றும் தரப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் தரவை வழங்குகிறது.
இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே தேசிய அளவிலான சுற்றுச்சூழல் தர ஆய்வகங்களைக் கொண்டுள்ளன.