TNPSC Thervupettagam

தேசிய டால்பின் தினம்

March 28 , 2022 1239 days 1039 0
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது அக்டோபர் 5 ஆம் தேதியினைத் தேசிய டால்பின் (ஓங்கில்) தினமாக அறிவித்துள்ளது.
  • இது இந்த ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படும்.
  • தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு அக்டோபர் 5 ஆம் தேதியைத் தேசிய டால்பின் தினமாக அறிவிப்பதற்கான இந்த முடிவை எடுத்தது.
  • கங்கை டால்பின் உள்ளிட்ட டால்பின் இனங்களின் பாதுகாப்புத் திட்டங்களின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செய்வதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
  • கங்கை டால்பின்கள் உயிர்வாழும் வகையில் கங்கை மற்றும் அதன் துணை நதிகளின் நீரின் தரம் மற்றும் அதன் ஓட்டத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்