இந்தியக் கல்வி நிறுவனங்களில் நிலவும் இடப் பற்றாக்குறையை (மாணவர் சேர்க்கை இருப்பு) தீர்ப்பதற்காக தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகமானது நிறுவப்பட உள்ளது.
இந்தப் பல்கலைக்கழகமானது 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு இணங்குவதோடு, பல்வேறு மொழிகளில் உயர்தர உயர்கல்வியைப் பெறுவதற்கும் வழி வகுக்கும்.
SWAYAM (சுவயம்), ePG – பாதசாலா, சுவயம் – பிரபா, தேசிய டிஜிட்டல் நூலகம், இகியான் கோஷ் (eGyanKosh) மற்றும் மெய்நிகர் ஆய்வகங்கள் ஆகியவை தற்போது டிஜிட்டல் பல்கலைக் கழகத்தில் இணைக்கக் கூடிய நிலையில் உள்ள டிஜிட்டல் வளங்களாகும்.