தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் (NDLM) ஆனது இந்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் கால்நடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளின் நாடு தழுவிய டிஜிட்டல் தரவுத் தளத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள கால்நடை விலங்குகளுக்குப் பசு ஆதார் எனும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணினை வழங்குகிறது.
இந்தத் திட்டம் இனங்களின் தரத்தை மேம்படுத்துகிறது என்ற ஒரு நிலையில், நோய்க் கண்காணிப்பை வலுப்படுத்தி மற்றும் கால்நடை துறை சார் பொருட்களின் தடமறிதலை உறுதி செய்கிறது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 35.96 கோடி பசு ஆதார் எண்கள் மற்றும் 9.5 கோடி கால்நடை உரிமையாளர்கள் NDLM திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
NDLM ஆனது, விவசாயிகளுக்கு சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்காக பாரத் பசுதான் அமைப்பு மற்றும் 1962 கால்நடை உரிமையாளர் செயலி மூலம் செயல்படுகிறது.