மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தேசிய டிஜிட்டல் சுகாதார செயல்திட்ட அறிக்கையைப் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காகப் பொது வெளியில் வெளியிட்டுள்ளார்.
இது தேசிய அளவில் ஒன்றிணைக்கப்பட்ட சுகாதார அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா, மகப்பேறு குழந்தைகள் நலம், நிக்சாய் போன்ற திட்டங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகள் சுகாதார சேவைகளை வலுவான மற்றும் திறமையான முறையில் வழங்க சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப் படவிருக்கின்றன.