தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம்
August 18 , 2020
1834 days
2143
- பிரதமர் மோடி அவர்கள் 74வது சுதந்திர தினத்தன்று நிகழ்த்திய தனது உரையின் போது தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு இந்தியரும் ஒரு சுகாதார அடையாள அட்டையினைப் பெற உள்ளனர்.
- இந்த அடையாள அட்டையானது அந்த நபரின் முந்தைய மருத்துவ நிலைமை, சிகிச்சை, நோய் கண்டறிதல் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களையும் கொண்டிருக்கும்.
- இந்தத் திட்டமானது முழுவதும் தொழில்நுட்ப அடிப்படையிலானதாகும்.
- இந்தத் திட்டமானது இந்தியாவில் சுகாதார நலத்தின் செயல்திறன், செயலாக்கம் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அல்லது ஆயுஷ்மான் பாரத் என்பதின் கீழ் செயல்படவுள்ளது.

Post Views:
2143