தேசிய டிஜிட்டல் நில முன்னெடுப்பு – நிலப் பதிவு தரவுதளம்
January 7 , 2026 2 days 48 0
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) ஆனது 'நிலப் பதிவு தரவுத் தளம்' என்ற திட்டத்தை அதன் முதல் வகையான தேசிய டிஜிட்டல் நில நிர்வாக முன்னெடுப்பாகத் தொடங்கியுள்ளது.
'நிலப் பதிவு தரவுத் தளம்' என்பது நிலம் மற்றும் சொத்துப் பதிவுகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த, GIS அடிப்படையிலான (புவியிட தகவல் அமைப்பு) டிஜிட்டல் தளம் ஆகும்.
இது சண்டிகர் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பு ஆனது டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் (DILRMP) கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.