TNPSC Thervupettagam

தேசிய டிஜிட்டல் நில முன்னெடுப்பு – நிலப் பதிவு தரவுதளம்

January 7 , 2026 2 days 41 0
  • கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) ஆனது 'நிலப் பதிவு தரவுத் தளம்' என்ற திட்டத்தை அதன் முதல் வகையான தேசிய டிஜிட்டல் நில நிர்வாக முன்னெடுப்பாகத் தொடங்கியுள்ளது.
  • 'நிலப் பதிவு தரவுத் தளம்' என்பது நிலம் மற்றும் சொத்துப் பதிவுகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த, GIS அடிப்படையிலான (புவியிட தகவல் அமைப்பு) டிஜிட்டல் தளம் ஆகும்.
  • இது சண்டிகர் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் (DILRMP) கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதனுடன், MoRD 'வருவாய் விதிமுறைகளின் சொற்களஞ்சியத்தினையும்' (GoRT) அறிமுகப் படுத்தியது.
  • GoRT, வட்டார மொழிகள், இந்தி, ஆங்கிலம் மற்றும் ரோமன் எழுத்து வடிவங்களில் நில வருவாய் தொர்பான சொற்கூறுகளின் தரமான விளக்கத்தினை வழங்குகிறது.
  • இந்த முன்னெடுப்புகள் நிலப் பதிவு மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்