நிதி ஆயோக் அமைப்பானது, தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இது அரசாங்கத் தரவைப் பயனர்களுக்கு உகந்த முறையில் வழங்குவதோடு, தரவு சார்ந்த முடிவெடுத்தல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்.
2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தத் தளமானது, அரசாங்க மூல ஆதாரத் தரவுகள் முழுவதும் தரப்படுத்துவதையும், பல தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி பயனர்களை எளிதாகப் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கும் நெகிழ்திறன் மிக்க பகுப்பாய்வுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.