இந்தியாவில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினமானது இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளினை நினைவு கூறுவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
மேலும் மக்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் பற்றிய தகவல்களை பரப்புவதற்கும் மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவின் இளம் பிரதமர் ஆவார்.
இவர் இந்தியாவின் 6வது பிரதமராக நியமிக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பிரதமராக நாட்டிற்குச் சேவை செய்தார்.
இவர் 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதியன்று ஒரு மனித வெடிகுண்டின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
V.P. சிங் அரசின் கீழ் மே 21 ஆம் தேதியினைத் தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினமாக மத்திய அரசு அறிவித்தது.