TNPSC Thervupettagam

தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2025 வரைவு

July 29 , 2025 10 hrs 0 min 22 0
  • தொலைத்தொடர்புத் துறையானது (DoT) 2025 ஆம் ஆண்டு தேசிய தொலைத்தொடர்பு கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது.
  • இது மிகவும் பாதுகாப்பான, புதுமையான மற்றும் நிலையான தொலைத்தொடர்பு வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் 1 மில்லியன் பொது அருகலை/Wi-Fi மையங்களை அமைப்பதுடன், 90% அளவில் 5G மற்றும் 100% 4G பயன்பாட்டுப் பரவலை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • 10 லட்சம் (1 மில்லியன்) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தற்போதுள்ள 10 லட்சம் தொலைத் தொடர்பு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் என்று இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • ஒரு பிரத்தியேக தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலத்தின் (TMZ) ஆதரவுடன் உள் நாட்டு உற்பத்தி 150% வளர்ச்சி பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கார்பன் தடப் பதிவு 30% குறைத்தல் மற்றும் தொலைத் தொடர்பு உபகரணங்களில் மறு சுழற்சி நடைமுறைகளை ஏற்றுக் கொள்வது முக்கிய நிலைத்தன்மை இலக்குகள் ஆகும்.
  • இந்தக் கொள்கையானது, உலகளாவிய 6G தரப்படுத்தலில் இந்தியப் பங்களிப்பை ஊக்குவிக்கிறது மற்றும் தொலைதூரப் பகுதிகளில் செயற்கைக்கோள் வழியிலான இணையத்தை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்