TNPSC Thervupettagam

தேசிய தொழில்முனைவோர் தினம் 2026 - நவம்பர் 09

November 12 , 2026 3 days 78 0
  • 'விக்சித் பாரத் @ 2047' இலக்கை அடைவதில் தொழில்முனைவோரின் பங்கை முன்னிலைப்படுத்துவதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று நிறுவப்பட்டது, இந்நாள் தேசிய தொழில்முனைவோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டு நவம்பர் நிலவரப்படி, 2.62 லட்சத்திற்கும் அதிகமான DPIIT அங்கீகாரம் பெற்ற புத்தொழில் நிறுவனங்களுடன் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது.
  • புத்தொழில் நிறுவனங்களுக்கான கண்டுபிடிப்புகள், நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலை ஊக்குவிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் 'ஸ்டார்ட்-அப் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டது.
  • அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் சுமார் 52% பெருநகரங்கள் அல்லாத இதர நகரங்களிலிருந்து உருவானவை ஆகும், இது முக்கிய நகரங்களைத் தாண்டி தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்