2025 ஆம் ஆண்டு தேசிய நகர்ப்புற மாநாடு ஆனது, வளர்ச்சியடைந்த இந்தியா / விக்ஸித் பாரத் 2047 தொலைநோக்குக் கொள்கையின் கீழ் நிலையான நகர்ப்புற மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காகப் புது தில்லியில் நடைபெற்றது.
குப்பைக் கிடங்கு சீரமைப்புப் பணிகளுக்கான துரிதப்படுத்துதல் திட்டம் (DRAP) நகரத்தின் குப்பைகளைச் சுத்தம் செய்யத் தொடங்கியது.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 8.8 கோடி மெட்ரிக் டன் அளவிலான பழைய கழிவுகளை அகற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வுக்காக என்று தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தில் (NIUA) சுவச் பாரத் திட்டம் - அறிவு மேலாண்மை அலகு (KMU) அமைக்கப் பட்டது.
கொள்கை மற்றும் தரவு முன்னெடுப்புகள் மூலம் மலிவு விலையிலான நகர்ப்புற வீட்டு வசதியை ஆதரிப்பதற்காக தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தில் (NIUA) வாழ்விட மற்றும் வீட்டு வசதி குறித்த பொதுக் கொள்கை மையம் நிறுவப்படும்.
GIS அடிப்படையிலான கைபேசி செயலியான IIRS சங்கலன் செயலியை, விரைவான நகர்ப்புற ஆய்வுகளுக்காக இந்தியத் தொலைதூர உணர்திறன் நிறுவனம் (IIRS) அறிமுகப் படுத்தியது.
நிலையான நகர்ப்புறத் திட்டங்களுக்கு தனியார் மற்றும் பலதரப்பு நிதியுதவியை ஈர்ப்பதற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (HUDCO) தலைமையிலான நகர்ப்புற முதலீட்டுச் சாளர அமைப்பு (UiWIN) அறிமுகப் படுத்தப் பட்டது.
பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மலை மற்றும் இமயமலை நகரங்களில் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுவச் பாரத் திட்டம் - நகர்ப்புறம் 2.0 என்ற திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான மலை மற்றும் இமயமலை நகரங்களில் நிதி அறிமுகப்படுத்தப்பட்டது.