TNPSC Thervupettagam

தேசிய நகர்ப்புற மாநாடு 2026

October 27 , 2026 4 days 83 0
  • விக்சித் பாரத் 2047-ஐ நோக்கி நகர்ப்புற நிர்வாகம், திட்டமிடல் மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன் தேசிய நகர்ப்புற மாநாடு 2026 ஒடிசாவின் புவனேஸ்வரில் நிறைவடைந்தது.
  • வலுவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs), சிறந்த நகராட்சி நிதிகள், ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் முடிவுகள் அடிப்படையிலான சேவை வழங்கல் ஆகியவை இப்பரிந்துரைகளில் அடங்கும்.
  • அம்ருத் 2.0 (AMRUT 2.0) திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட நீர் சந்தை (Used Water Marketplace), நகர்ப்புற சவால் நிதி (UCF) இணையதளம் மற்றும் நகராட்சி நிதி தரவு மையம் ஆகியவை புதிய முன்னெடுப்புகளில் அடங்கும்.
  • பிரதமரின் தெருவோர வியாபாரிகள் தற்சார்பு நிதி (PM SVANidhi) திட்டத்தின் கீழ் 18 தெருவோர உணவு மையங்கள் தொடங்கப்பட்டன.
  • சுத்திகரிக்கப்பட்ட பயன்படுத்திய நீரின் சுழற்சி பயன்பாட்டிற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் மத்திய பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு (CPHEEO) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
  • திட்ட கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக CPWD நிர்மாண் மற்றும் CPWDவே (CPWDway) ஆகிய டிஜிட்டல் தளங்கள் தொடங்கப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்