176 கிமீ நீளம் கொண்ட கேரளாவின் பம்பை நதி மாநிலத்தின் மூன்றாவது நீளமான நதியாகும்.
இந்த நதியானது, பீர்மேடு பீடபூமியில் உள்ள புளிச்சிமலை மலையில் 5,410 அடி உயரத்தில் உருவாகிறது.
இது பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் ஆலப்புழா மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது.
2,235 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ள பம்பை நதிப் படுகை, 30 பஞ்சாயத்துகள் மற்றும் செங்கனூர் நகராட்சியை உள்ளடக்கியது.
மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆனது, தேசிய நதி வளங்காப்புத் திட்டத்தில் (NRCP) இதனை சேர்ப்பதற்கான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள அரசிடம் கோரியுள்ளது.