தேசிய நதிப் போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் அமைப்பு
January 17 , 2025 238 days 215 0
உள்நாட்டு நீர்வழி மேம்பாட்டுச் சபையின் இரண்டாவது கூட்டம் ஆனது இந்திய உள் நாட்டு நீர்வழி ஆணையத்தினால் (IWAI) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, தேசிய நதிப் போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் அமைப்பு (NRT&NS) ஆனது தொடங்கப்பட்டது.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீடித்த நிலைத் தன்மையை நவீனமயமாக்குவதையும் மேம்படுத்துவதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் தேசிய நீர்வழிகளில் வழிசெலுத்தலை மேம்படுத்த இது நிகழ்நேரத் தரவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவில் 14,500 கிலோ மீட்டர் தொலைவிலான பரந்த நீர்வழிப் போக்குவரத்து வலையமைப்பு உள்ளது என்ற நிலையில் இதில் சுமார் 111 அறிவிக்கப்பட்ட தேசிய நீர்வழிகளும் (NWs) அடங்கும்.