தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் புதிய கிளைகள்
March 11 , 2019 2346 days 781 0
தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் இரண்டு புதிய கிளைகளை ஏற்படுத்திட அரசு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
ஒன்று ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியிலும் மற்றொன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரிலும் ஏற்படுத்தப்படும்.
இந்த நடவடிக்கை நொடித்துப் போதல் மற்றும் திவால் விதிமுறை 2016 என்ற விதிமுறையின் கீழ் அதிகரித்து வரும் வழக்குச் சுமைகளின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
இந்திய நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை இந்தியாவில் தீர்த்திட உதவுகின்ற ஒரு பகுதி நீதித்துறை அமைப்பே இந்த தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயமாகும்.
இது 2013 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. இது 2016 ஆம் ஆண்டு ஜுன் 01-ம் தேதி அமைக்கப்பட்டது.