முழுவதும் இந்திய அரசிற்குச் சொந்தமான நிறுவனமாக தேசிய நிலப் பணமாக்கல் கழகத்தினை நிறுவுவதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கழகமானது, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உபரி நிலம் மற்றும் கட்டிடச் சொத்துகளைப் பணமாக்கும் ஒரு செயல்முறையை மேற்கொள்ளும்.
தற்போது மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், நிலம் மற்றும் கட்டிடங்களாக கணிசமான உபரி அளவில், பயன்படுத்தப்படாத மற்றும் அதிகம் பயன்படாத பல முக்கியமற்ற சொத்துகளைக் கொண்டுள்ளன.