TNPSC Thervupettagam

தேசிய நீர் உச்சி மாநாடு 2026

September 20 , 2026 5 hrs 0 min 40 0
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று புது தில்லியில் நடைபெற்ற நீர் தொடர்பான தேசிய துறைசார் உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட நீர் தரவு ஆளுமை தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
  • இந்த உச்சி மாநாடு ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த உச்சி மாநாட்டில் நீர் தரவுகளின் ஒருங்கிணைந்த சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
  • சிறந்த நீர் தரவு மேலாண்மைக்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் சீரான தரவு வடிவங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
  • உச்சி மாநாட்டு பரிந்துரைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் செயல்படுத்துவதற்கு வழக்கமான ஆய்வுகள் பரிந்துரைக்கப்பட்டன.
  • நகர்ப்புறமயமாக்கலால் அதிகரித்து வரும் நீர்த் தேவையைச் சமாளிக்கத் தயாராகுமாறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) அறிவுறுத்தப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்