தேசிய நீர்வழிகள் (படகுகள்/முனையங்களின் கட்டுமானம்) விதிமுறைகள், 2025 என்ற விதிகளானது, மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு நீர்வழிகளின் ஒரு பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் தனியார் துறையின் பெரும் பங்களிப்பை ஈர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நீர்வழிகளில் தனியார், பொது மற்றும் கூட்டு துணிகர முயற்சி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் படகுத் துறை மற்றும் அதன் முனையங்களை நிறுவுவதற்கு இது ஆதரவளிக்கும்.
கடந்தப் பத்தாண்டுகளில் தேசிய நீர்வழிகளில் 18 மில்லியன் டன்னாக இருந்த சரக்குப் போக்குவரத்து ஆனது, 2024 ஆம் நிதியாண்டில் 133 மில்லியன் டன்னாக அதிகரித்து உள்ளது.