TNPSC Thervupettagam

தேசிய நீர்வழித்தடம்-2 இல் முதல் சர்வதேச சரக்கு பயணம்

October 11 , 2026 14 days 130 0
  • அசாமின் திப்ருகாரில் இருந்து வங்கதேசத்தின் டாக்கா வரையிலான முதல் சர்வதேச சரக்கு கப்பல் பயணத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இந்த முதல் பயணமானது, அசாம் பெட்ரோ-கெமிக்கல்ஸ் லிமிடெட் (APCL) தயாரித்த மெத்தனாலை போகிபீல் முனையத்திலிருந்து டாக்காவில் உள்ள பங்கான் துறைமுகத்திற்கு கொண்டு சென்றது.
  • இந்தச் சரக்கு தேசிய நீர்வழித்தடம்-2 (NW-2), பிரம்மபுத்திரா நதி மற்றும் இந்தியா-வங்காளதேச நெறிமுறை வழித்தடம் (IBPR) வழியாகப் பயணித்தது.
  • இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு திப்ருகாரிலிருந்து வெளிநாட்டுத் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் செல்வது இதுவே முதல் முறையாகும்.
  • வடகிழக்கு இந்தியாவில் மலிவான, பசுமையான மற்றும் திறமையான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்