தேசிய நீர்வழிப் பாதை – 2ல் முதலாவது சரக்குப் போக்குவரத்து
November 3 , 2019 2084 days 1213 0
ஹால்டியா கப்பல் துறை வளாகத்திலிருந்து உள்நாட்டு நீர்வழிப் பாதை – 2ன் (National Waterway - 2) வழியே ஒரு முக்கிய கொள்கல சரக்குக் கப்பலானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று குவஹாத்தியின் பாண்டுவில் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் (IWAI - Inland Waterways Authority of India) முனையத்திற்குச் செல்ல இருக்கின்றது.
இந்த 12-15 நாட்கள் பயணமானது பின்வருவனவற்றின் வழியே செல்லும் ஒரு ஒருங்கிணைந்த உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகும்.
தேசிய நீர்வழிப் பாதை - 1 (கங்கை நதி)
தேசிய நீர்வழிப் பாதை - 97 (சுந்தரவனக் காடுகள்)
இந்தியா – வங்க தேச நெறிமுறைப் பாதை (Indo Bangladesh Protocol - IBP) மற்றும்
தேசிய நீர்வழிப் பாதை - 2 (பிரம்மபுத்ரா நதி)
இந்த உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துப் பாதையில், அதாவது NW-2 இல் முதன்முதலில் மேற்கொள்ளப்படும் கொள்கல சரக்குப் போக்குவரத்து இதுவேயாகும்.
IBP பற்றி
இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையிலான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தமானது (PIWTT - Protocol on Inland Water Transit and Trade) 2018 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் சரக்குப் போக்குவரத்திற்கு வேண்டி அவற்றின் நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்காக பரஸ்பர நன்மை பயக்கும் முறைகளை இது அனுமதிக்கின்றது.
IBP பாதையானது NW - 1ன் கொல்கத்தாவிலிருந்து (இந்தியா) NW - 2ன் (பிரம்மபுத்ரா நதி) சில்காட் (அசாம்) மற்றும் NW - 16ன் (பராக் நதி) கரிம்கஞ்ச் (அசாம்) ஆகியவை வரை நீண்டுள்ளது.