இந்த நாள் 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
இந்தச் சட்டம் 6 அடிப்படை நுகர்வோர் உரிமைகள் மற்றும் ஒவ்வொரு நுகர்வோரும் பின்பற்ற வேண்டிய ஐந்து பொறுப்புகளை பட்டியலிடுகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1991, 1993 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை புதுப்பிக்கப்பட்டது.
பின்னர், 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றியமைத்து, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 என்று கொண்டு வரப் பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Efficient and Speedy Disposal through Digital Justice" என்பதாகும்.