தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு கொண்ட அடையாளப் பலகைகள்
October 8 , 2025 59 days 85 0
இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு கொண்ட செங்குத்து அடையாளப் பலகைகளை நிறுவ உள்ளது.
இந்தப் பலகைகள் ஆனது நெடுஞ்சாலை எண், சங்கிலித் தொடர் தொலைவுக் குறியீடு மற்றும் அவசர தகவல் தொடர்பிற்கான விவரங்கள் போன்ற குறிப்பிட்டத் தகவல்களைக் கொண்டிருக்கும்.
நெடுஞ்சாலை ரோந்து, சுங்கச் சாவடி மேலாளர், உள்ளக பொறியாளர் மற்றும் அவசர உதவி எண் 1033 ஆகியவற்றுக்கான தொடர்பு எண்கள் இதில் சேர்க்கப்படும்.
QR குறியீடுப் பலகைகள் ஓய்வுப் பகுதிகள், சுங்கச்சாவடிகள், சரக்குந்துகள் நிறுத்துமிடங்கள், நெடுஞ்சாலை தொடக்க மற்றும் முடிவுப் பகுதிகளுக்கு அருகில் வைக்கப் படும்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், பயணிகள் முக்கியமான நெடுஞ் சாலைத் தகவல்களை எளிதாக அணுகுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.