இந்திய அரசானது புதிதாகத் திருத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் (திருத்தம்) சட்டத்தின் கீழ் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவை (NCMC) அமைத்து உள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தத் திருத்தப்பட்ட சட்டம் ஆனது, NCMC உள்ளிட்ட முக்கிய அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குகிறது.
2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்திற்கு முன்னதாகவே NCMC முறை சாரா அமைப்பாகச் செயல்பட்டது.
ஜூலை 23 ஆம் தேதியன்று, உள்துறை அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (செயல்முறை) விதிகளை வெளியிட்டது.
தேசிய அளவிலான விளைவுகளுடன் கூடிய பேரிடர்களைக் கையாள்வதற்கானப் பொறுப்பினை கொண்ட உச்ச நிலை அமைப்பாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது எந்தவொரு அச்சுறுத்தும் அல்லது அதிகரித்து வரும் பேரிடர் சூழ்நிலைக்குமான தயார்நிலையை மதிப்பிட்டு, எதிர் நடவடிக்கை எடுப்பதற்கான திறன்களை வலுப்படுத்த தேவையான வழிமுறைகளை வெளியிடும்.