தேசிய பதக்கம் வென்ற முதல் செவித்திறன் குறைபாடுள்ள துப்பாக்கிச் சுடும் வீரர்
June 24 , 2019 2241 days 844 0
துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தேசிய அளவிலான பதக்கம் வென்ற முதல் செவித்திறன் குறைபாடுள்ள துப்பாக்கிச் சுடும் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் (16) ஆவார்.
இவர் 21 வயதிற்குட்பட்டோருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிப் பிரிவின் பொதுப்பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்.
இவர் மூத்தோர் பிரிவில் உலக சாதனைப் படைத்த ரஷ்யாவின் அலெக்சாண்டர் மற்றும் இளையோர் பிரிவில் சீனாவின் யூஃபெங் வாங்க் ஆகிய வீரர்களை விட அதிக புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்டோருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றவராவார்.