தேசிய பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் மேலாண்மை செயல்திறன்
July 1 , 2025 9 hrs 0 min 22 0
2020-25 ஆம் ஆண்டிற்கான தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் மீதான மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டில் (MEE) கேரளா மற்றும் சண்டிகர் ஆகிய இரண்டும் 'மிகச் சிறந்த' மதிப்பெண்களைப் பெற்றன.
சண்டிகர் ஆனது சராசரியாக சுமார் 85.16% என்ற MEE மதிப்பையும், கேரளா 76.22% மதிப்பையும் பெற்றது.
பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில், எரவிகுளம் தேசியப் பூங்கா (கேரளா) மற்றும் டச்சிகம் தேசியப் பூங்கா (ஜம்மு & காஷ்மீர்) 92.97% MEE மதிப்பெண்களுடன் இதில் முதலிடத்தில் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த மதிகெட்டான் சோலைத் தேசியப் பூங்கா மற்றும் சின்னார் வன விலங்கு சரணாலயம் ஆகியவை முதல் 10 பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தன.