மருத்துவ வசதிகளை எளிதில் பெறுதல் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் தாய் மற்றும் சிசு மரணங்களைக் குறைப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கஸ்தூரிபா காந்தியின் பிறந்தநாளன்று கொண்டாடப் படுகிறது.
இந்த தினம் ஒயிட் ரிப்பன் அலையன்ஸ் இந்தியா எனும் அமைப்பால் முன்மொழியப் பட்டு, 2003-ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரித்து அறிவிக்கப்பட்டது.
இது பாதுகாப்பான கர்ப்பம், திறமையான மகப்பேறு பராமரிப்பு, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய சேவைகள் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
2026ம் ஆண்டிற்கான இதன் கருத்துரு "Equity in Maternal Healthcare: Leaving No Mother Behind" என்பதாகும்.