TNPSC Thervupettagam

தேசிய பால் பவன்

August 1 , 2019 2113 days 792 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் புது தில்லியில் உள்ள தேசிய பால் பவனில் விமான மாதிரியுடன் ஒரு சிறப்பு இந்திய விமானப் படை (IAF - Indian Air Force) மையத்தைத் திறந்து வைத்தார்.
  • இது IAF-ல் பணியாற்ற சிறு குழந்தைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதியான BS தனோவா விமானப் படையின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு “இந்திய விமானப் படை : ஒரு முத்திரை” என்ற ஒரு புதிய முப்பரிமாண கைபேசியில் இயங்கக் கூடிய காணொலி விளையாட்டைத் தொடங்கி வைத்தார்.
இதுபற்றி
  • தேசிய பால் பவன் என்பது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் முழுவதும் நிதியளிக்கப் படக்கூடிய ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது குழந்தைகளுக்கு உகந்த சூழலில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதற்காக 1956 ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமரான ஜவஹர்லால் நேருவினால் ஒரு தேசிய அளவிலான திட்டமாக ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்