பிராண்ட் பைனான்ஸ் என்ற அமைப்பால் (Brand Finance) சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய பிராண்டுகள் 2018 அறிக்கையின்படி, இந்தியாவானது 50 உயர் மதிப்புடைய தேசிய பிராண்டுகளில் 9வது இடத்தில் உள்ளது.
இத்தாலியானது இந்தியாவை மாற்றி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் பிராண்ட் மதிப்பில் 5% வளர்ச்சியை எட்டிய போதிலும் இந்தியாவானது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கீழிறங்கியுள்ளது.
கடந்த வருடத்தில் அமெரிக்காவானது தனது பிராண்ட் மதிப்பானது 23% உயர்ந்து மீண்டும் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
சீனாவானது மீண்டும் இரண்டாவது இடத்திலும் அதனைத் தொடர்ந்து ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்த அறிக்கை இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான பிராண்ட் பைனான்ஸ் நிறுவனமானது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்காக அந்நிறுவனங்களின் வர்த்தக முத்திரை மற்றும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்ட ராயல்டி நிவாரண முறையை உபயோகித்துள்ளது.