புது டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் இந்திய குடியரசுத் தலைவர் 2024 ஆம் ஆண்டிற்கான தேசியப் புவி அறிவியல் விருதுகளை வழங்கினார்.
புவி அறிவியல் துறையில் மகத்தான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இந்திய அரசின் சுரங்கத் துறை அமைச்சகத்தினால் 1966 ஆம் ஆண்டில் இந்த விருதுகள் நிறுவப் பட்டன.
மொத்தம் 20 புவி அறிவியலாளர்கள் ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ஒரு இளம் புவி அறிவியலாளர் விருது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் 12 விருதுகளைப் பெற்றனர்.
நில அதிர்வியல் மற்றும் ஆய்வு சார் புவி இயற்பியலில் அவரது பங்களிப்புகளுக்காக ஷியாம் சுந்தர் ராய்க்கு 2024 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.
இந்தியப் புவியியல் ஆய்வகத்தின் மூத்தப் புவியியலாளர் சுசோபன் நியோகிக்கு மேகாலயா, ஜார்க்கண்ட் மற்றும் பண்டேல்கண்ட் போன்ற பகுதிகளில் கண்டத் தட்டுகளின் பரிணாமம் தொடர்பான அவரது பணிக்காக 2024 ஆம் ஆண்டிற்கான இளம் புவி அறிவியல் விருது வழங்கப்பட்டது.