தேசிய பேரிடர் மீட்புப் படை உருவாக்க தினம் 2026 – ஜனவரி 19
January 23 , 2026 18 days 58 0
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆனது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
NDRF ஆனது உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் செயல்படுகிறது.
அவசரகாலச் சூழ்நிலைகளில் விரைவான மற்றும் சிறப்புப் பேரிடர் நடவடிக்கையை உறுதி செய்வதே NDRF படையின் முக்கிய நோக்கமாகும்.
நாடு முழுவதும் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களின் போது தேடுதல், மீட்பு, வெளியேற்றம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை இந்தப் படை கையாள்கிறது.