TNPSC Thervupettagam

தேசிய மரபணு மாற்றம் மற்றும் பயிற்சி மையம்

January 9 , 2023 953 days 465 0
  • தேசிய மரபணு மாற்றம் மற்றும் பயிற்சி மையம் (NGETC) என்பது ஒற்றைச் சாளர அமைப்புடன் கூடிய ஒரு அதிநவீன மையமாகும்.
  • CRISPR-Cas வழியிலான மரபணு மாற்ற முறை உட்பட பல்வேறு மரபணுத் திருத்த முறைகளை ஏற்பதற்கான பிராந்தியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தேசிய தளமாக இது செயல்படும்.
  • மரபணுத் திருத்தம் என்பது இந்திய ஆராய்ச்சித் துறையானது பயிர்களில் விரும்பத் தகுந்த மாற்றங்களை உருவாக்கி வழங்கும் வகையில் மாறுவதற்கான நம்பத் தகுந்தத் தொழில் நுட்பமாக விளங்கும்.
  • தேசிய வேளாண்-உணவு உயிரித் தொழில்நுட்ப நிறுவனமானது, வாழை, அரிசி, கோதுமை, தக்காளி, மக்காச்சோளம் மற்றும் தினை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களில் மரபணு மாற்றம் மேற்கொள்வதற்கான செயற்முறைகளை விரிவுபடுத்தச் செய்யும் தனது செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்