TNPSC Thervupettagam

தேசிய மருத்துவ ஆணையம்

September 30 , 2020 1783 days 838 0
  • மத்திய அரசானது இந்திய மருத்துவக் கழகத்தை கலைத்து விட்டு அதே நேரத்தில் 4 இதர தன்னாட்சி வாரியங்களுடன் சேர்த்து தேசிய மருத்துவ ஆணையத்தை (NMC - National Medical Commission) அமைத்துள்ளது.
  • அந்த 4 தன்னாட்சி வாரியங்கள் பின்வருமாறு:
    • இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம்
    • முதுகலை மருத்துவக் கல்வி வாரியம்
    • மருத்துவ ஆய்வு மற்றும் தர நிர்ணய ஆணையம்
    • அறவியல் மற்றும் மருத்துவப் பதிவுகள் வாரியம்
  • இந்த வாரியங்கள் NMC அமைப்பின் தினசரி செயல்பாடுகளில் உதவுவதற்காக வேண்டி அமைக்கப் படுகின்றது.
  • NMC சட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
  • NMC ஆனது 1 தலைவர், 10 பதவி வழி உறுப்பினர்கள் மற்றும் 22 பகுதி நேர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • சுரேஷ் சந்திர சர்மா அவர்கள் இதன் முதலாவது தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பணியாற்றவுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்