TNPSC Thervupettagam

தேசிய மருத்துவச் சாதனங்கள் கொள்கை 2023

May 3 , 2023 829 days 409 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய மருத்துவச் சாதனங்கள் கொள்கைக்குச் சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நோயாளிகளுக்கான அதிகரித்து வரும் சுகாதார நலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மருத்துவச் சாதனங்கள் துறையினை நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறையுடன் விரைவான மேம்பாட்டுப் பாதையில் கொண்டு செல்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொது சுகாதார நல நோக்கங்களான அணுகல், மலிவு விலை, தரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றினைப் பூர்த்தி செய்யும் வகையில், மருத்துவ சாதனத் துறையின் முறையான மேம்பாட்டிற்கு இது வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • தற்போது 11 பில்லியன் டாலர் மதிப்பீட்டினைக் கொண்டிருக்கும் இந்தத் துறையானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக வளர்ச்சி பெற இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்